இறுதியாக கலால் வரி மூலம் டிரம்புக்கு பதிலடி: ராகுல் காந்தி

68பார்த்தது
இறுதியாக கலால் வரி மூலம் டிரம்புக்கு பதிலடி: ராகுல் காந்தி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி விதிப்புக்கு பிரதமர் மோடி கலால் வரியை உயர்த்தி பதிலடி கொடுத்துள்ளார் என எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டல் செய்துள்ளார். இன்று (ஏப்.07) பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், பண வீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசுக் கொள்ளை என்ற மற்றொரு பரிசு கொடுக்கப்பட்டுள்ளது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி