டெல்லி மெட்ரோவில் இருக்கைக்காக இரு பெண்கள் தலைமுடியை பிடித்து சண்டையிட்டுக்கொள்ளும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு பெண் இருக்கை குறித்து கேள்வி கேட்க, மற்றொரு பெண் என் மடியில் உட்கார் என்று ஆவேசமாக சொல்கிறார். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாகியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பயனர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.