சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், ரகு (எ) ரஜினி ரகு (54). ரஜினியின் தீவிர ரசிகரான இவர் கடன் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். ரஜினியின் படம் வெளியாகும்போது கடவுட் வைப்பது, அன்னதானம் போடுவது என அக்கம்பக்கத்தினரிடமும், வங்கியிலும் கடன் வாங்கி செய்துள்ளார். கடனை திரும்ப செலுத்த வங்கி தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கவே இதற்கு மேல் வேறு வழியில்லை எனக்கூறி இந்த முடிவெடுத்தது தெரியவந்துள்ளது.