நாகாலாந்து ஆளுநரான இல.கணேசனின் மூத்த சகோதரர் இல.கோபாலன் 83வது வயதில் இன்று (ஜன. 08) காலமானார். வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இல.கோபாலனின் உடல் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இல.கோபாலனின் சதாபிஷேக விழா கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பரில் சென்னையில் நடைபெற்ற நிலையில் அதில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.