கேரள மாநிலம் கன்னூரில் இன்று காலை (ஜன.08) கோர விபத்து நடந்துள்ளது. தனியார் பேருந்து மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் காயமடைந்தனர். கர்நாடக மாநில பதிவெண் கொண்ட கார் விபத்தில் சுக்குநூறாகசிக்குண்டு நொறுங்கியது. காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கார் கட்டுப்பாட்டை இழந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது.