பாஜக முன்னாள் MLA வீட்டில் சிக்கிய 3 முதலைகள்

74பார்த்தது
பாஜக முன்னாள் MLA வீட்டில் சிக்கிய 3 முதலைகள்
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள பாஜக முன்னாள் MLA ஹர்வன்ஷ் சிங் ரத்தோர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 19 கிலோ தங்கமும், ரூ.3.80 கோடி ரொக்கமும் சிக்கியது. மேலும் 150 கோடி வரி ஏய்ப்பு செய்ததையும் கண்டுபிடித்துள்ளனர். இதையடுத்து அவரின் வீட்டுக்குள் சிறிய குளம் இருப்பதை, ஆய்வு செய்தபோது, ​​அதில் 3 முதலைகள் இருப்பது தெரியவந்தது. முதலைகள் வைத்திருப்பது சட்டவிரோதம் எனக்கூறி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி