திமுகவினர் அரைவேக்காட்டுதனமாக கூச்சலிடுகின்றனர் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். சட்டப்பேரவை கூட்டம் முடிவடைந்த பின் செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், "என்ன பேச போகிறேன் என்பதே தெரியாமல் திமுக எம்எல்ஏக்கள் கூச்சலிடுகின்றனர். திமுகவினரின் செயலை சபாநாயகர் அப்பாவு தடுத்து நிறுத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.