மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு புல்லுமேடு கானகப் பாதையில் பயணிக்கும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஏற்படும் பாதுகாப்பு சிக்கலை கருத்தில் கொண்டு நேர குறைப்பு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் காலை 7 முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். முன்னதாக மதியம் 1 மணி வரை அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது ஒரு மணி நேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.