ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தவெக வேட்பாளராக லயோலா மணி என்பவர் போட்டியிடுவதாக ஒரு தகவல் வெளியான நிலையில் அது பொய்யான வதந்தி என அவர் மறுத்துள்ளார்.