“விதிகளை மீறிய அதிமுகவினர் மீது என்ன நடவடிக்கை? என நான் கேட்டதை ஏற்று, உரிமை மீறல் குழு விசாரிக்கும் என நீங்கள் ஒரு தீர்ப்பு அளித்துள்ளீர்கள். எனினும், இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள் என உறுதியளித்தால் நடவடிக்கையை திரும்ப பெறலாம்.” என முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று அதிமுக உறுப்பினர்கள் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படுவதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.