நாமக்கல்லைச் சேர்ந்த அனு பிரசாத் என்பவர், கடந்த 2007ல் IOB வங்கியில் ரூ.2.57 லட்சம் கல்விக்கடன் வாங்கியுள்ளார். உரிய காலத்தில் பணம் செலுத்த முடியாததால், கோர்ட் மூலம் ஒரே தவணையில் கட்டி முடித்துள்ளார். ஆனால், இன்னும் ரூ.7 லட்சம் கட்ட வேண்டும் என தனியார் ஏஜென்சி மூலம் வங்கி மிரட்டல் விடுத்துள்ளது. அதனால், நாமக்கல் நுகர்வோர் கோர்ட்டை அவர் நாட, ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க IOBக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.