சீனாவில் மனைவி, சகோதரி மற்றும் 4 குழந்தைகளை சாலை விபத்தில் இழந்த ஜாங் ஐக்விங் (74) என்ற முதியவர் 36 ஆண்டுகளாக போக்குவரத்தை சரிசெய்யும் தன்னார்வலராக செயல்பட்டு வருகிறார். தன்னை போல வேறு யாரும் உறவுகளை இழக்க கூடாது என்பதற்காக இந்த செயலை ஜாங் செய்ய தொடங்கியுள்ளார். இதுமட்டுமன்றி தனது வாழ்வாதாரத்திற்காக பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரிக்கும் வேலையையும் செய்து வருகிறார்.