கேரளா: சோட்டானிக்கரையில் 20 வருடமாக பூட்டியிருந்த வீட்டின் பிரிட்ஜில் மண்டை ஓடு கண்டுப்பிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூட்டிய வீட்டில் சமூக விரோதிகளால் இடையூறு ஏற்படுவதாக அப்பகுதியினர் புகார் அளித்ததையடுத்து, போலீசார் அவ்வீட்டில் சோதநை நடத்தினர். அப்போது, ஃபிரிட்ஜில் மனித மண்டை ஓடு, முதுகெலும்பு மற்றும் எலும்பு கூடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.