குளிக்க மறுத்த பெண் கொலை.. 226 ஆண்டுகள் சிறை

56பார்த்தது
குளிக்க மறுத்த பெண் கொலை.. 226 ஆண்டுகள் சிறை
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தை சேர்ந்தவர் பிரையன் ஸ்டீவன் ஸ்மித் (வயது 52). இவரது செல்போனை திருடிய பெண், அதில் ஒரு பெண்ணை ஸ்மித் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வீடியோக்கள் இருந்ததை பார்த்துள்ளார். இதுகுறித்து போலீசாரிடம் கூறவே, ஸ்மித்தை கைது செய்த போலீசார் அவரை விசாரித்தனர். அப்போது இது மட்டும் இல்லாமல் சாலையோரம் வசிக்கும் பெண்ணை மது வாங்கித்தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்று, அப்பெண்ணை குளிக்க சொன்னபோது மறுத்ததால் துப்பாக்கியால் சுட்டு கொன்றதாக கூறியுள்ளார். தற்போது அவருக்கு 226 ஆண்டுகள் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி