கேரளா: கோழிக்கோடு புதுபாடியில் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கழுத்தில் துப்பட்டா சிக்கியதில் கழுத்து இறுக்கி சுதா என்ற பெண் நேற்று (டிச., 23) இரவு 11 மணியளவில் உயிரிழந்தார். தனது உறவினர் ஒருவருடன் சென்று கொண்டிருந்த போது சுதாவின் துப்பட்டா ஸ்கூட்டர் சக்கரங்களுக்கு இடையே சிக்கியது. தலையில் பலத்த அடிபட்டு சாலையில் விழுந்த சுதாவை உடனடியாக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.