திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா கடந்த டிச. 4ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 10 நாட்கள் விமரிசையாக நடைபெற்றது. விழாவின் நிறைவாக, கடந்த டிச. 13ம் தேதி மாலை 6 மணியளவில், 2,668 அடி உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்பட்டது. நேற்றுடன் (டிச. 23) இது நிறைவு பெற்ற நிலையில் இன்று (டிச. 24) மகா தீப கொப்பரையை கோயிலுக்கு கொண்டு வரும் பணி நடைபெற்று வருகிறது.