கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராயிடம் நடத்தப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையில் நடுங்க வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்த மருத்துவமனைக்கு நண்பரை பார்க்க சென்ற சஞ்சய் வெளியே வந்து மது அருந்தினார். பின்னர் சிவப்பு விளக்கு பகுதிக்கு சென்றுவிட்டு பெண் தோழியின் நிர்வாண புகைப்படத்தை கேட்டு வாங்கியிருக்கிறார். தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.