செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட செம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி. இவர் மதுராந்தகத்திலிருந்து செங்கல்பட்டு சென்ற அரசு பேருந்தில் சென்றார். இதனையடுத்து மாமண்டூர் பேருந்து நிலையத்தில் அரசு பேருந்து நிற்கும் போது சிவகாமி கீழே இறங்கியதில் கால் இடறி கீழே விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.