பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் நடிகர் எஸ்.வி. சேகர் சரணடைவதில் இருந்து 4 வார இடைக்கால விலக்கு அளித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், “பொது வாழ்க்கையில் இருப்பவர் பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?. ஒரு தகவலை பகிர்வதற்கு முன்னர் அதனை சரியாக பார்த்திருக்க வேண்டாமா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, சமூக வலைதளத்தில் தெரியாமல் பகிர்ந்து விட்டதாகவும், உடனடியாக பதிவை நீக்கி விட்டதாகவும் எஸ்.வி. சேகர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.