4-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை முயற்சி (வீடியோ)

11409பார்த்தது
மும்பையில் குடும்ப தகராறு காரணமாக தற்கொலைக்கு முயன்ற பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. டோம்பிவிலி பகுதியில் ப்ரீத்தி உமா பாரதி என்ற பெண்ணின் குடும்பத்தில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, விரக்தியடைந்த ப்ரீத்தி தனது வீட்டின் பால்கனியில் ஏறியுள்ளார். குதிக்க வேண்டாம் என பலரும் அந்த பெண்ணிடம் கூறிய போதிலும் அவர் கேட்காமல் கட்டிடத்தின் 4-வது மாடியில் இருந்து குதித்தார். ப்ரீத்தி தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

தொடர்புடைய செய்தி