ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமான நிலையில், அத்தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், புதியதாக கட்சி ஆரம்பித்த விஜய், வேட்பாளரை களமிறக்கி தன் பலத்தை நிரூப்பிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியின் ஆதிக்கம் அதிகம் இருக்கும் என்பதால் தவெக நிச்சயம் போட்டியிடாது என்று பெரும்பாலான அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடாதது குறிப்பிடத்தக்கது.