வேங்கைவயல் மக்களை தவெக தலைவர் விஜய் விரைவில் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேற்று ஜன.20 பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் ஏகனாபுரம் மக்களை விஜய் சந்தித்தார். இதைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராம குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் சந்திக்க உள்ளதாக தவெக கட்சி வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.