2026-ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தல் குறித்து தவெகவின் தேர்தல் பிரச்சார வியூக வகுப்பாளராக இருக்கும் பிரசாந்த் கிஷோர் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். விஜயுடன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து தொடர்பில் இருப்பதாகவும், தமிழ்நாட்டில் இளைஞர்கள் ஆதரவைப் பெற்று விஜய் உச்சம் பெற்று விளங்குவதாகவும் கூறினார். தமிழ்நாடு மற்றும் பீகாரின் தேர்தல் முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை தரும். பொறுத்திருந்து பாருங்கள் என அவர் கூறியுள்ளார்.