கடலூர் மாவட்டம் அருகே திருமணமாகாத விரக்தியில் 38 வயதான மணிகண்டன் என்பவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குடும்பத்தினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெம்போ ஓட்டுநரான மணிகண்டனுக்கு 38 வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. அவரது சகோதரிக்கு திருமணம் முடிந்த நிலையில் தனக்கு திருமணம் ஆகாமல் இருப்பதாக கூறி மதுவிற்கு அடிமையான. இந்நிலையில், நேற்று (மார்ச.,1) அவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.