உலகிலேயே எந்த கிரிக்கெட் வீரரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை விராட் கோலி செய்து இருக்கிறார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இன்று (மார்ச்.,2) விராட் கோலி களம் இறங்கினார். இது அவரது 300ஆவது ஒருநாள் போட்டியாகும். 300 ஒருநாள் போட்டிகள் விளையாடிய 7ஆவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலம் 300 ஒருநாள் போட்டிகள், 100 டெஸ்ட் போட்டிகள், 100 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய ஒரே வீரர் என்ற மாபெரும் சாதனையை விராட் படைத்துள்ளார்.