‘பிப்ரவரி மாதம் ரூ.1.84 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்’ - மத்திய அரசு அறிவிப்பு

84பார்த்தது
‘பிப்ரவரி மாதம் ரூ.1.84 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல்’ -  மத்திய அரசு அறிவிப்பு
ஜிஎஸ்டி வசூலானது கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்த ரூ.1.84 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் வழங்கப்பட்ட மொத்த ரீபண்ட் ரூ.20,889 கோடி. இது முந்தைய ஆண்டை விட 17.3 விழுக்காடு அதிகம் எனப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.68 லட்சம் கோடியாக இருந்தது. இத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 9.1 விழுக்காடு அதிகரித்து ரூ.1.84 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் ரூ.1.96 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி