சிலர் குழந்தைகளை தினமும் குளிக்க வைக்கும் பழக்கம் கொண்டிருப்பர். ஆனால் இது தேவையற்றது. குழந்தைகளை தினமும் குளிக்க வைத்தால் சருமத்தில் வறட்சியும் எரிச்சலும் ஏற்படலாம். அதிக துர்நாற்றம் வீசாமல் சுத்தமாக இருந்தால் குளிக்க வைப்பதை தவிர்த்து விடலாம். முகம், இடுப்பு, அக்குள் பகுதிகளில் துணிகளை வைத்து துடைத்தால் போதுமானது. குழந்தைகளை வாரத்திற்கு 2-3 முறை குளிக்க வைத்தால் போதுமானது.