டாஸ்மாக் மது விற்பனையில் குறைந்தபட்சம் ரூ.1000 கோடி அளவில் ஊழல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். "திமுக அரசு தவறான மதுபான கொள்கை மூலம் ஊழலை செய்துள்ளது. மது ஆலைகளில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மதுவில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. ஆட்சிக்கு வருவதற்கு இந்த பணத்தை திமுக பயன்படுத்துகிறது" என்றார். அண்மையில் டாஸ்மாக் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ED சோதனை நடந்தது.