6 மாவட்டங்களில் இன்று (மார்ச் 12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதே போல் நாளை மார்ச் 13 முதல் 18ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.