போதை கணவன் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவி

32471பார்த்தது
போதை கணவன் மீது வெந்நீரை ஊற்றி கொன்ற மனைவி
கன்னியாகுமரியை சேர்ந்த தம்பதி ஹரிதாஸ் (58) - லதா (48). மது பழக்கத்திற்கு அடிமையான ஹரிதாஸ் அடிக்கடி மனைவியுடன் சண்டை போட்ட நிலையில் நேற்று வழக்கம் போல குடி போதையில் வந்து தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த லதா வெந்நீரை எடுத்து கணவன் மீது ஊற்றியதில் அவர் வலியால் துடித்தார். சத்தம் கேட்டு வந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரிதாஸ் உயிரிழந்தார், போலீசார் வழக்குப்பதிந்து லதாவை கைது செய்தனர்.