ஏ.ஆர்.ரகுமானின் "மறக்குமா நெஞ்சம்" இசை நிகழ்ச்சியை பார்க்க கரூரை சேர்ந்த அஸ்வின் மணிகண்டன் என்பவர் குடும்பத்துடன் வந்திருந்தார். இருந்தும் நிகழ்ச்சியை காண முடியாததால், திரும்பிய நிலையில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஏசிடிசி நிறுவனம் மீது அஸ்வின் மணிகண்டன் வழக்கு தொடர்ந்தார். இதுகுறித்த விசாரணையில் டிக்கெட் தொகை ரூ.12 ஆயிரம், இழப்பீடு ரூ.50 ஆயிரம், செலவுத்தொகை ரூ.5,000 என மொத்தம் ரூ.67,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.