2 கார்களை துவம்சம் செய்த படையப்பா யானை

542பார்த்தது
2 கார்களை துவம்சம் செய்த படையப்பா யானை
கேரளாவின் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே படையப்பா என்ற காட்டு யானை மக்களை சமீப காலமாக தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. சில ஆண்டுகள் முன்பு வரை பொதுமக்களுக்கு பெரிய தீங்கு ஏதும் விளைவிக்காமல் இருந்து வந்த நிலையில், தற்போது கோடை வெப்பம் காரணமாக வனத்தில் இருந்து இடம்பெயர்ந்து அடிக்கடி குடியிறுப்பு பகுதிகளுக்குள் உலா வருகிறது. கடந்த மாதம் மூணாறில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவரை இந்த யானை தாக்கிக் கொன்றது.

இதனிடையே அடிக்கடி வாகனங்களை சூரையாடி வரும் படையப்பா யானை, இன்று காலை மாட்டுப்பட்டி எஸ்டேட் பேக்டரி அருகே இரண்டு கார்களை அடித்து நொறுக்கிவிட்டு ஆற்றுக்குள் இறங்கியது.

தொடர்புடைய செய்தி