கணவன் கண்முன்னே உயிரிழந்த மனைவி (வீடியோ)

66பார்த்தது
குஜராத் மாநிலம் வதோதராவில் நேற்று (ஜூன் 9) இரவு ஒரு சோக சம்பவம் நடந்துள்ளது. கணவன், மனைவி இருவரும் சாலையில் நடந்து சென்றனர். அப்போது அவ்வழியாக ஸ்கார்பியோ கார் ஒன்று வேகமாக வந்தது. அது கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. அப்போது சாலையில் நடந்து சென்ற தம்பதி மீது கார் மோதியது. இதில் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கணவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. கணவன் கண்முன்னே மனைவி இறந்துவிட்டதால் அந்த நபர் கதறி அழுதார். விபத்து குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி