தமிழகத்தில் கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6,000 வழங்கப்பட்டது. பகுதியாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்பட்டது. இந்தாண்டு ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.2,000 வழங்கப்பட்டது. இதற்காக ரூ.144 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து கேட்ட நிவாரணத்தொகை வராததால், தமிழக அரசு நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டுள்ளது. அப்படி இருந்தாலும் கூட பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.