பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்ட செயலை அமைச்சர் செந்தில் பாலாஜி கிண்டலடித்துள்ளார். கோவையில் செந்தில் பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சாட்டையால் அடித்துக் கொண்டது குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், “இன்று ஞாயிற்றுக்கிழமை, உங்களுக்கு வேலை இருக்கா? இல்லையா?” என பதில் அளித்துவிட்டு புறப்பட்டு சென்றார்.