கத்தாரின் ராயல் குடும்பத்தை சேர்ந்த இளவரசி ஹயா தன்னை காதலிப்பதாக கற்பனை செய்து கொண்டு அவருக்கு கடிதங்களும் பூக்களும் அனுப்பிய ஓட்டுநர் அபுசலாவுக்கு இளவரசியை பார்க்க தடை விதித்து பிரிட்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2 நாட்கள் இளவரசியின் ஓட்டுநராக பணியாற்றிய அபுசலா அவரின் மீது காதல் வயப்பட்டுள்ளார். இளவரசிக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ள நிலையில், இளவரசர் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.