இந்த 2024ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்திலும், ரூ.50 லட்சத்துக்கும் அதிகமான விலையுள்ள 6 கார்கள் விற்பனையாகியுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு முன் இந்த எண்ணிக்கை வெறும் 2-ஆக இருந்துள்ளது. அதிகபட்சமாக ஓராண்டில் 20,000 கார்களை விற்பனை செய்து Mercedes-Benz அசத்தியுள்ளது. இதற்கு அடுத்ததாக BMW நிறுவனம் 10,556 கார்களை விற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.