சிலரது வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் ஃப்ரீஸரில் பனி மலைப்போல் ஐஸ் கட்டிகளால் நிரம்பியிருக்கும். இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் ஃப்ரிட்ஜின் கதவு அல்லது லிட் கேஸ்கெட் பழுதடைந்திருப்பது தான். நீரை ஆவியாக்கும் காயில் சேதமடைந்திருந்தால் கூட இந்தப் பிரச்சனை வரும். எனவே, ஃப்ரிட்ஜை சுத்தம் செய்து பராமரித்து வருவதோடு தொழிநுட்ப வல்லுநர்களை வைத்து அவ்வப்போது சர்வீஸ் செய்து வந்தால் இந்த பிரச்சனை வராது.