பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.2,000 ரொக்கம் வழங்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதில் பல குளறுபடிகள் நிலவுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். 2023, 2024இல் ரொக்க பணம் வழங்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள அவர், 2025க்கான பொங்கல் பரிசுத் தொகுப்பிலும் அனைவருக்கும் ரூ.2,000 ரொக்கம் வழங்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.