"லட்சக்கணக்கான மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது?"

84பார்த்தது
"லட்சக்கணக்கான மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது?"
முன்னதாக நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது. தற்போது தேர்வு முடிவிலும் முறைகேடு நடந்துள்ளது. ஒரே மையத்தில் தேர்வெழுதிய 6 மாணவர்கள் 720 மதிப்பெண்கள் பெற்றிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பல கேள்விகளை எழுப்புகிறது. இது ஒருபுறம் என்றால், மறுபுறம் மாணவர்கள் பலரும் இந்த தேர்வால் தற்கொலை செய்து வருகின்றனர். லட்சக்கணக்கான மாணவர்களின் குரல்களை அரசு ஏன் புறக்கணிக்கிறது? முறைகேடு தொடர்பான மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இந்த முறைகேடு தொடர்பாக விசாரித்து, நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசின் கடமை இல்லையா? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி