8.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

80பார்த்தது
8.5 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் கோடிக்கணக்கான மதிப்புள்ள போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அசாம் மற்றும் மிசோரம் எல்லையில் இருந்து 1.7 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.8.5 கோடி இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், போதைப் பொருள் கடத்தியவர் கைது செய்யப்பட்டார். இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்மை காலமாக இந்தியாவில் போதைப் பொருள் நடமாட்டம் வெகுவாக அதிகரித்துள்ளது. இளைஞர்களை குறிவைத்து ஹெராயின் மாஃபியா மிகப்பெரிய நெட்வொர்க் ஆக இயங்கி வருகிறது.

தொடர்புடைய செய்தி