அண்ணாமலை தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடிய எஸ்.வி.சேகர்!

12760பார்த்தது
மக்களவைத் தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை படுதோல்வி அடைந்ததை அக்கட்சியின் மூத்த தலைவரும் நடிகருமான எஸ்.வி.சேகர் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாநில தலைவர் அண்ணாமலைக்கும், எஸ்.வி.சேகருக்கும் இடையே நடக்கும் மோதல் அனைவரும் அறிந்ததே. தேர்தல் முடிவு வெளியான நாளில் கூட எஸ்.வி.சேகர் செய்தியாளர்களிடம், "அண்ணாமலை தலைமையில் பாஜக ஒரு பூஜ்ஜியம் என்பது நிருபணமாகி உள்ளது" என பேட்டியளித்தார். இந்நிலையில், அண்ணாமலையின் தோல்வியை பட்டாசு வெடித்து கொண்டாடி இருப்பது தமிழக பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி