யூடியூபர் சவுக்கு சங்கர் மீது எதற்காக குண்டர் சட்டம் போடப்பட்டது என நீதிமன்றம் அறிய விரும்புகிறது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் அடைத்ததை எதிர்த்து அவரது தாய் கமலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், வழக்கில் பதில் மனு தாக்கல் செய்வதில் தமிழக அரசு ஏன் ஆர்வம் காட்டுவதில்லை? என கேள்வி எழுப்பியது.
பெண் காவல்துறை அதிகாரிகளை அவதூறாகப் பேசியதாக சவுக்கு சங்கரை போலீசார் கைது செய்தனர். அவர் மீது 7 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், கடந்த மே 12ஆம் தேதி குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.