சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் ஆபத்துகள்

75பார்த்தது
சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் ஆபத்துகள்
மக்கள் தொகை அதிகரிப்பால் நம் நாட்டில் சுற்றுப்புற சூழலுக்கு பெரும் பிரச்சினையாக உள்ளது. இதனால் இயற்கை செல்வங்கள் அழிக்கப்படுகின்றன. பொருளாதார முன்னேற்றம் என்ற பெயரில் வனப்பகுதி அழிக்கப்படுகிறது. இதனால் இயற்கை சூழல் கெடுவதோடு மழையும் குறைந்து வளமான நிலங்கள் வறண்ட பாலைவனமாக மாறிக்கொண்டிருக்கின்றன.

தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுப்பொருட்களும், கழிவு நீரும் ஆறுகள், நீர்நிலைகளில் கலப்பதால் நீர் மாசு ஏற்படுகிறது. சுற்றுச்சூழல் மாசுபடுவதால் நாம் சந்திக்கும் மிகப்பெரிய சவால் பூமி வெப்பமடைதல் ஆகும். வெப்பநிலை அதிகரிப்பு காரணமாக அடுத்த 30 முதல் 50 ஆண்டுகளில் கடலில் உள்ள பவளப்பாறைகள் அழிய நேரிடும். வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக துருவ பிரதேசங்களில் உள்ள பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பதால் கடலின் நீர்மட்டம் உயரும்.

தொடர்புடைய செய்தி