“எஸ்டிபிஐ கூட கூட்டணி வச்சா இதான் நிலை” - அண்ணாமலை

63பார்த்தது
“எஸ்டிபிஐ கூட கூட்டணி வச்சா இதான் நிலை” - அண்ணாமலை
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். “அதிமுக தலைவர்களை தமிழக மக்கள் முற்றிலும் நிராகரித்து விட்டார்கள். சந்தர்ப்பவாத அரசியல் செய்யும் அதிமுகவை வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்கள். கூட்டணியில் இருந்த போது ஒரு பேச்சு, கூட்டணியில் இல்லாத போது ஒரு பேச்சு என்ற நிலையில் இருக்கும் அதிமுகவை மக்கள் விரும்பவில்லை. எஸ்டிபிஐ போன்ற சில அடிப்படைவாத குழுக்களுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டால் என்ன ஆகும் என்பதை தமிழக மக்கள் அதிமுகவிற்கு பாடம் புகட்டி இருக்கிறார்கள்” என அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி