நாடாளுமன்ற தேர்தலில் NDA கூட்டணி பெரும்பான்மை தொகுதிகளை வென்றதற்கு பிரதமர் மோடிக்கு தைவான் அதிபர் லாய் வாழ்த்துக் கூறினார். அதற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். இதன் காரணமாக பிரதமர் மோடிக்கு சீன வெளியுறவு அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும், “உலகில் ஒரே ஒரு சீனா மட்டுமே உள்ளது. சீனாவின் தைவான் பிராந்தியத்துடனான எந்த வகையான நேரடி அதிகாரப்பூர்வ தொடர்புகளையும் சீனா உறுதியாக எதிர்க்கிறது” என தெரிவித்துள்ளது.