தமிழ்நாட்டில் சமூக நீதி மலர்வது எப்போது? - அன்புமணி கேள்வி

58பார்த்தது
தமிழ்நாட்டில் சமூக நீதி மலர்வது எப்போது? - அன்புமணி கேள்வி
ஜார்க்கண்டிலும் சாதிவாரிக் கணக்கெடுப்பு, தமிழ்நாட்டில் சமூகநீதி மலர்வது எப்போது? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பதிவில், வடக்கில் பிகாரில் வீசத்தொடங்கிய சமூக நீதித் தென்றல் ஜார்க்கண்ட் மாநிலத்திலும் சமூகநீதிக் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், தெற்கில் கர்நாடகம், ஒடிசா, ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 4 மாநிலங்களில் சமூகநீதிக் காற்று வீசினாலும் தமிழ்நாட்டில் சமூகநீதி வறட்சி தான் நிலவுகிறது. இன்றைய நிதிநிலை அறிக்கையின் 7 கனவுகளில் முதலாவது கனவு சமூகநீதி என்று தமிழக அரசு விளம்பரம் செய்திருக்கிறது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்ற சமூகநிதிக் கனவை இன்றைய நிதிநிலை அறிக்கை நனவாக்குமா? அல்லது அது கனவாகவே தொடருமா என பதிவிட்டுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி