பாரிஸில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டி இன்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவடைகிறது. இந்த முறை இந்தியாவால் ஒரு தங்கப்பதக்கம் கூட வெல்ல முடியவில்லை. 2021-ம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கம் வென்றார். அதற்கு முன்பாக 2008-ம் ஆண்டு துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கம் வென்று இருந்தார். இவர்களுக்கு முன்பாக இந்தியா வென்ற 8 தங்கமும் ஹாக்கி போட்டிக்கானது மட்டுமே.