மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 19 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 12 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 7 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-ல் 19 பிரிவுகளில் பரிசு பெறுவதற்கு தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் தேர்வாகியுள்ளது.