உட்கட்சி விவகாரம் குறித்து பொதுவெளியில் பேசக்கூடாது. தனிப்பட்ட பிரச்னைகளை மனதில் வைத்துக்கொண்டு தேர்தல் பணிகளில் சுனக்கம் காட்டக் கூடாது, கருத்து வேறுபாடு இன்றி ஒற்றுமையாக தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என நிர்வாகிகளுடனான காணொலி காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். அதிமுகவில் மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி இடையேயான கருத்து வேறுபாடு குறித்து மறைமுகமாக இபிஎஸ் பேசியுள்ளார்.